
திருச்சி ஐயப்பன் கோவில் அருகே அதிமுகவினர் சிலர், முதலமைச்சர் ஒபிஎஸ் உருவபொம்மையை எரித்து அட்டூழியத்தில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்டவர்களை காவலாளர்கள் கைது செய்தனர்.
ஜெவின் சமாதியில் தியானத்தை முடித்து புது உத்வேகத்துடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒபிஎஸ் தற்போது அதிமுகவில் உள்ள உட்கட்சி பூசலை ஒவ்வொன்றாக போட்டு உடைத்தார்.
ஒபிஎஸின் வாய் திறக்கப்பட்டத்தில் இருந்து, அதிமுகவில் நிலவிய சர்வாதிகாரப் போக்கை ஒவ்வொரு அமைச்சராக வெளிப்படுத்தி வருகின்றனர்.
நேற்று இரவு முதல் தூக்கத்தை தொலைத்து, ஒபிஎஸ் என்ன சொல்ல போகிறார்? என்று தமிழகமே உற்று நோக்கி வருகிறது.
இன்றைய பொழுது, சற்று அதிரடியாகவே ஆரம்பித்தார் ஒபிஎஸ். அவருக்கு அமைச்சரின் ஆதரவும், மக்களின் ஆதரவும் பெருகி வருகிறது.
அதேநேரத்தில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசி வரும் அமைச்சர்களும், சில தொண்டர்களும் நாகரிகமற்ற முறையில் ஒபிஎஸை திட்டுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
இதிலிருந்து, பதவிக்காக நாகரிகமற்ற செயல்களை செய்கிறார்களே என்ற மனப்போக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக, ஒபிஎஸ்க்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், திருச்சி ஐயப்பன் கோவில் அருகே அதிமுகவைச் சேர்ந்தவர்கள் சிலர், முதலமைச்சர் ஒபிஎஸ்ஸின் உருவ பொம்மையை எரித்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வந்த காவலாளர்கள், அட்டூழியத்தில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.