ஆளுநர் மாளிகை பொங்கல் கொண்டட்டத்தில் பங்கேற்ற ஓபிஎஸ்-இபிஎஸ்… புறக்கணித்தார் மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published Jan 12, 2023, 10:55 PM IST
Highlights

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்ற நிலையில் திமுக விழாவை புறக்கணித்துள்ளது. 

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்ற நிலையில் திமுக விழாவை புறக்கணித்துள்ளது. ஆண்டுதோறும் ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஆளுநர் மாளிகையில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் என சுமார் 2,000 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார்.

இதையும் படிங்க: நேரம் தவறாத டாப் 20 விமான நிலையங்களில் இடம்பிடித்த கோவை

இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர். அவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி, வேட்டி, சட்டை, தலைப்பாகை என பாராம்பரிய உடையுடன் வரவேற்றார்.

இதையும் படிங்க: இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை... பொங்கலை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு!!

இந்த விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் என திமுக நிர்வாகிகள் புறக்கணித்தனர். முன்னதாக கடந்த ஜன.9 ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவையில் அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் முறையாக படிக்காமல் உரையில்  பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் பெயர்களையும் தவிர்த்து பேசியதால் மோதல் போக்கு ஏற்பட்டது. இதன் எதிரொலியாகவே முதல்வர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இந்த விழாவை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. 

click me!