இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை... பொங்கலை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு!!

By Narendran SFirst Published Jan 12, 2023, 9:38 PM IST
Highlights

பொங்கலை முன்னிட்டு ஜன.13, 14 ஆகிய தேதிகளில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பொங்கலை முன்னிட்டு ஜன.13, 14 ஆகிய தேதிகளில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் திருநாள் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மட்டும் நெரிசல் மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலவச பேருந்தால் வாழ்வாதாரம் பாதிப்பு; மினி பஸ் ஓட்டுநர்கள் மனு

மேலும் அனைத்து முனையங்களில் இருந்தும் செல்லும் கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணிக்குப் பதிலாக 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 18 ஆம் தேதி மட்டும் அனைத்து முனையங்களில் இருந்தும் புறப்படும் முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணிக்குப் பதிலாக காலை 4 மணி முதல் இயக்கப்படும். 2023 ஜனவரி 13, 14, 18 ஆகிய தேதிகளில் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: நேரம் தவறாத டாப் 20 விமான நிலையங்களில் இடம்பிடித்த கோவை

மேற்குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் ஜனவரி 13, 14, 18 ஆகிய மூன்று நாள்களுக்கு மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருவதால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

click me!