
உண்மைகள் பல வெளிவர இருக்கும் நிலையில் சேகர் ரெட்டியை கொலை செய்ய முயற்சி நடப்பதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறையினர் தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்த்தார் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் 120 கோடி ருபாய் பணமும், கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்டது, மேலும் இதில் 33 கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தது.
அடுத்தடுத்து நடந்த சோதனையில், தங்கம், பணம் புதிய நோட்டுக்கள் அறிமுகமான சில நாட்களிலேயே, சேகர் ரெட்டியிடம் இவ்வளவு தொகை வந்தது அதிர்ச்சியை எற்படுத்தியது.
இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறையினரும், சிபிஐயும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சேகர் ரெட்டி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதுவரை அவர் மீது எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யாததால் இரண்டு வழக்குகளிலும் சேகர் ரெட்டிக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து, சேகர் ரெட்டி மத்திய மற்றும் தமிழக உள்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், எனக்கு மீண்டும், மீண்டும் கொலை மிரட்டல்கள் வருகிறது. எனக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது. எனவே எனக்கும், என் குடும்பத்துக்கும் உடனே உரிய பாதுகாப்பு தர வேண்டும்' மேலும் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் தாமே ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சேகர் ரெட்டியை கொலை செய்ய சிலர் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் பரவி வருவதாகவும், கொலை முயற்சி குறித்து சிறையில் இருக்கும் சேகர் ரெட்டி டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார் எனவும் தெரிவித்தார்.
உண்மை பல வெளிவர இருப்பதால் சேகர் ரெட்டியை கொலை செய்ய முயற்சி நடப்பதாகவும், பல ரகசியங்கள் சேகர் ரெட்டி மூலம் வந்துவிட கூடாது என்பதாலேயே மிரட்டல் வருவதாகவும் குற்றம் சாட்டினார்..