
சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மண்எண்ணை குண்டு வீசி சென்றதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சத்தம் கேட்டதும் அருகில் இருந்த அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு ஓடி வந்தனர்.
காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் உடனடியாக வெளியே வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
காவல்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
சம்பவம் நடைபெற்ற தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையின் மிகவும் பரப்பான அண்ணாசாலையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.