17 ஆம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை.. ஆன்லைன் ரம்மி தடை.. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்..

By Thanalakshmi VFirst Published Oct 7, 2022, 5:37 PM IST
Highlights

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளது. ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதியே ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 17ஆம் தேதி கூடும் சட்டசபையில் நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளது. ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதியே ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 17ஆம் தேதி கூடும் சட்டசபையில் நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க:பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு..? யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் வீட்டில் என்ஐஏ தீவிர சோதனை..

ஆன்லைன் விளையாட்டு பற்றி ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி  சந்துரு குழு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. தற்போது கொண்டுவரப்படவுள்ள அவசர சட்டம் மூலம் பணத்தை வைத்து சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படும் நிலை ஏற்படும். 

மேலும் படிக்க:பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அதிரடி கைது

click me!