தொடரும் இணைய வழி மோசடி.. பிரபல நிறுவனத்தின் பெயரில் தமிழகத்தில் நடக்கும் SCAM - போலிகளை கண்டு ஏமாறும் மக்கள்!

By Ansgar R  |  First Published Nov 3, 2023, 12:10 PM IST

Online Grocery Scam : எல்லாமே டிஜிட்டல் மையமாகிவிட்ட இந்த உலகத்தில், நம் விரல் நுனியில் இந்த உலகமே அடங்கியுள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. ஆனால் இது டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல மோசடிக்காரர்கள் மக்களை இன்றளவும் ஏமாற்றிக் கொண்டுதான் வருகின்றனர்.


கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் மூலம் செல்போன் போன்ற பிற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வீட்டிற்கான மளிகை பொருட்களையும், அதிலும் குறிப்பாக அதிரடி ஆபர்களில் மளிகை பொருட்களை வாங்க மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

காரணம் அதிகமாகிவிட்ட போக்குவரத்து நெரிசலில், கடைக்கு சென்று நமக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு திரும்புவது என்பது பலருக்கு சிரமமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இதனை பயன்படுத்திக் கொண்டு பல நிறுவனங்கள் இலவச டோர் டெலிவரி மற்றும் தள்ளுபடிகளோடும் தங்களது பொருட்களை மக்களுக்கு விற்று வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

ஸ்மார்ட்போன் பரிசளித்த கணவருக்கு டாட்டா காட்டிய மனைவி: காதலனுடன் ஓட்டம்! 

ஆனால் இதனை பயன்படுத்திக்கொள்ளும் மோசடிக்காரர்கள் இணைய வழியிலும், வாட்ஸ் ஆப்பிலும் கவர்ச்சிகரமான பல விளம்பரங்களை வெளியிட்டு மோசடி செய்கின்றனர். அந்த வகையில் அண்மையில் ஒரு பிரபல நிறுவனத்தின் பெயரில் மிகப்பெரிய மோசடியானது தமிழகம் முழுவதும் நடந்துள்ளது. இந்த மோசடியில் சிக்கி பொதுமக்கள் சுமார் 1.5 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளனர் என்கின்ற அதிர்ச்சி தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது. 

ஒரு கிலோ பிஸ்தா, ஒரு கிலோ முந்திரி, ஒரு கிலோ கிஸ்மிஸ் பழம் மற்றும் ஒரு கிலோ பாதாம் இவை அனைத்தும் அதிரடி ஆஃபரில் வெறும் 399 ரூபாய்க்கு கிடைக்கின்றது என்று கூறி ஒரு பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக விளம்பரம் செய்து மோசடிக்காரர்கள் பணத்தை மக்களிடம் இருந்து ஏமாற்றியுள்ளனர். பொதுவாக பெரு நிறுவனங்களில் இருந்து பொருட்களை வாங்கும் மக்கள், அந்த நிறுவனத்திற்கு என்று உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே அணுகி பொருட்களை வாங்க வேண்டும் என்று பலரும் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். 

அதிமுக வார்டு உறுப்பினர்களை தாக்கிய திமுகவினர்.. கைது செய்யவில்லையென்றால் போராட்டம்- எச்சரிக்கும் இபிஎஸ்

ஆனால் விலை மிக மிக மலிவாக கிடைக்கிறது என்று நம்பி ஏமாந்து, நம்பகத்தன்மை அற்ற லிங்குகளை கிளிக் செய்து, அதன் மூலம் குறைவான விலையில் ஆர்டர் செய்துவிடலாம் என்று எண்ணும் நபர்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் பறிபோவதே மிஞ்சுகிறது. ஆகவே மக்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கண்டு ஏமாறாமல், நேரடியாக கடைகளுக்குச் சென்றோ, அல்லது ஆர்வபூர்வமான இணையதளங்களுக்கு சென்றோ தங்களுடைய பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!