தமிழகத்தில் நாளை 18 மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் மழை எச்சரிக்கை
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்
நாளை தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே நாளை 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பள்ளிகளுக்கு விடுமுறையா.?
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை எந்தவித முடிவும் தற்போது வரை எடுக்கப்படவில்லை. மழை நிலவரம், அதிகம் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களில் அந்த, அந்த மாவட்ட ஆட்சியர்கள் நிலைமையை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு எடுப்பார்கள் என பள்ளிக்கல்வித்துள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்