தமிழகத்தில் முதல் முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ள நிலையில், பரிசீலனைக்கட்டணம், கட்டமைப்பு, வசதிக்கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்களிக்கப்படுகிறது
கட்டிட அனுமதி- ஆன்லைன் விண்ணப்பம்
தமிழகத்தில் கட்டிடம் மற்றும் மனைப்பிரிவுகளுக்கான அனுமதியை பரப்பளவு, கட்டிடத்தின் உயரம் ஆகியவற்றின் அடிப்படையில்,உள்ளாட்சி அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்ககம் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் வழங்கி வருகின்றன. இந்நிலையில், தற்போதைய தொழில்நுட்ப வளர்சிக்கேற்ப அனைத்து வகையான செயல்பாடுகளும் ஆன்லைனில் மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்கெனவே, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் கட்டிட அனுமதிக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில், 2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு கட்டட அனுமதி தேவையில்லை. பணி முடிவு சான்று பெற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழகத்தில் முதல் முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை இன்று தலைமைச்செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
உங்களைப் பணக்காரராக மாற்றும் பொன் விதிகள்! லாபம் பல மடங்கு பெருக இதை ட்ரை பண்ணுங்க!
எந்த, எந்த வீடுகளுக்கு- தமிழக அரசு அறிவிப்பு
இத்திட்டத்தின் படி, www.onlineppa.tn.gov.in <http://www.onlineppa.tn.gov.in/> என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
எனவே விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டிய நிலையில் இருந்து நேரத்தை சேமிக்க முடிகிறது. மேலும் கட்டிடப்பணிகள் முடிந்ததும், முடிவுச்சான்று பெறுவதில் இருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளது. பரிசீலனைக்கட்டணம், கட்டமைப்பு, வசதிக்கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்களிக்கப்படுகிறது. 2500 சதுரடி வரையிலான மனையில், 3500 சதுரடியில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்திட்டம் பொருந்தும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.