சென்னையில் குப்பையில் கிடந்த வைர நெக்லஸ்; தூய்மை பணியாளரின் தூய்மை உள்ளத்திற்கு குவியும் பாராட்டு

By Velmurugan s  |  First Published Jul 21, 2024, 10:55 PM IST

சென்னையில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லசை மீண்டும் அதன் உரிமையாளரிடமே ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


சென்னை விருகம்பாக்கம், ரஜமன்னார் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர் தேவராஜ். இவர் தனது வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லசை குப்பைகயுடன் சேர்த்து, மாநகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கும் அர்பேசர் ஸ்மித் நிறுவன குப்பை வாகனத்தில் கொட்டி உள்ளார்.

தமிழகத்தை அதிரவைத்த பள்ளி மாணவன் கடத்தல் சம்பவம்; ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி விபரீத முடிவு

Latest Videos

அதன் பின்னர் வீட்டில் நகையைத் தேடியபோது நகை மாயமானது உணரப்பட்டது. மேலும் குப்பையுடன் சேர்த்து நகை கொட்டப்பட்டிருக்கலாம் என்பதை உணர்ந்த தேவராஜ் உடனடியாக உர்பேசர் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் அப்பகுதியில் குப்பை சேகரித்து வரும் அந்நிறுவனத்தின் குப்பை சேகரிப்பு வாகன ஓட்டுநர் அந்ாணி சாமி, அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் சோதனை நடத்தினார்.

மதுரை அழகர் கோவில் தேர் திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தேரை இழுத்து வழிபாடு

அப்போது குப்பைகளின் நடுவே இருந்த வைர நெக்லசை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். நகை மீண்டும் கிடைத்த சம்பவம் அதன் உரிமையாளருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தூய் பணியாளர் அந்தோணி சாமிக்கு பொதுமக்கள், இணையதள வாசிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

click me!