Tamil Nadu Train: நாளை முதல் தென்மாவட்ட ரயில்கள் சென்னைக்குள் நுழைய தடை; ரயில் சேவையில் முக்கிய மாற்றங்கள்!!

By Velmurugan s  |  First Published Jul 21, 2024, 12:48 PM IST

தாம்பரம் ரயில்வே பணிமனையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதால் மதுரை, நெல்லை உள்பட தென்மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெல்லை, மதுரை, திருச்சி என தென்மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய பெரும்பாலான ரயில்கள் தாம்பரம் கடந்து எழும்பூர் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகின்றன. இதனிடையே தாம்பரம் ரயில்வே பணிமனையில், சிக்னல் மேம்பாடு, தண்டவாளம் பராமரிப்பு உள்ளிட்ட சில முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகள் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜூலை 31ம் தேதி வரை தாம்பரம் வரும் தென்மாவட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் சேவை ஜூலை 22ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரையும், மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் ஜூலை 23ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? திட்டங்களை பட்டியலிட்டு கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின்!!

இதே போன்று எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில், திருச்சி செல்லும் ராக்போர்ட் அதிவிரைவு ரயில், காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில்கள் ஜூலை 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகின்றன.

தாம்பரத்தில் இரந்து செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் 22, 24, 26, 27, 29, 31 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. மறு மார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து 24, 25, 28, 30 ஆகிய தேதிகளில் தாம்பரம் வருவதற்கு பதிலாக விழுப்புரத்துடன் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madurai News: மதுரையில் மாமியாரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிவிட்டு நாடகமாடிய மருமகள்! சிக்கியது எப்படி?

மங்களூரு, சென்னை எழும்பூர் விரைவு ரயில் ஜூலை 22 முதல் 31ம் தேதி வரை திருச்சி வரை மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் 23 முதல் 31ம் தேதி வரை திருச்சியில் இருந்தே ம    ங்களூருவுக்கு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக செல்லும் சேலம் விரைவு ரயில் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ரயில்களின் சேவையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!