H Raja: உதயநிதி துணைமுதல்வரானால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து; எச் ராஜா எச்சரிக்கை

By Velmurugan s  |  First Published Jul 21, 2024, 11:18 PM IST

உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வரானால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.


பாஜக மூத்த தலைவர் எச். ராஜா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திண்ணைப் பள்ளியில் அனைவருக்கும் பொதுவாகவும், இலவசமாகவும் கல்வி கிடைத்தது. இது தான் சனாதன பாரம்பரியம். சனாதனத்தைப் பற்றிய எதிர்ப்பு என்பது தமிழகத்தில் கடந்த 180 ஆண்டுகளுக்கும் மேலாகத் தான் காதில் விழுந்து கொண்டு இருக்கிறது.

தமிழகத்தை அதிரவைத்த பள்ளி மாணவன் கடத்தல் சம்பவம்; ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி விபரீத முடிவு

Tap to resize

Latest Videos

undefined

உதயநிதியை துணைமுதல்வர் ஆக்கினால் தமிழகத்தில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காவல் துறை திருவேங்கடத்தை  அவசர அவசரமாகக் கொலை செய்தது ஏன்? ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அதிராம் மிக்க ஆளும் கட்சி நபர் ஒருவர் உள்ளார். 

Breaking: செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி; மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றம்

இதில் ஆளும் கட்சியினரின் தொடர்பு அதிகம் இருப்பதாக சந்தேகம் எழுகின்றது. ஆரம்பகட்ட காலத்தில் இருந்தே எதிர்க்கட்சிகள் அனைவரும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கொண்டு வந்தால் மட்டுமே உண்மை நிலவரம் வெளிவரும் என கூறி வருகின்றனர். எனவே இந்த வழக்கில் நிச்சயம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார்.    

click me!