சென்னை அவுட்டரில் 4 பேருந்துகள் விபத்து - பெண் ஒருவர் பலி...! 50 பேர் படுகாயம்...!!

Asianet News Tamil  
Published : Sep 28, 2017, 08:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
சென்னை அவுட்டரில் 4 பேருந்துகள் விபத்து - பெண் ஒருவர் பலி...! 50 பேர் படுகாயம்...!!

சுருக்கம்

One person was killed when four state buses collided with one another at Chengalpattu on the outskirts of Chennai.

சென்னை செங்கல்பட்டு புறவழிச்சாலையில் 4 அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை அரசு விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து படிப்பவர்களும், வேலை செய்பவர்களும் இன்று சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளனர். 

போக்குவரத்து பற்றாக்குறை இருப்பதால் தமிழக அரசு சார்பில் இன்று மட்டும் 700 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், போக்குவரத்து நெரிசலால் சென்னை செங்கல்பட்டு புறவழிச்சாலையில் 4 அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் ஒரு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 50 பேர் காயமடைந்தனர். 

இதைதொடர்ந்து பேருந்து ஒன்றோடு ஒன்று முட்டி கொண்டு நிற்பதால் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!
தேர்தலை சந்திக்கும் வரை நடிகர் விஜய்யை அரசியல் ரீதியாக மதிப்பிட முடியாது: சரத்குமார்