
தீயணைப்புத்துறை இயக்குநராக இருந்த டிஜிபி ஜார்ஜ் இன்றுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் பிரிவு உபச்சார விழா வேண்டாம் என தவிர்த்துவிட்டார்.
சென்னை காவல் ஆணையராக நீண்ட காலம் பணியாற்றிய ஜார்ஜ் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு என்று பல்வேறு துறைகளுக்கு மாற்றப்படட் இவர் கடைசி வரை தான் எதிர்பார்த்த சட்டம் ஒழுங்கு டிஜியாக மட்டும் ஆகவே இல்லை.
பல்வேறு வழக்குகளில் நீதிபதிகள் முன்பு ஆஜராகாமல் அவப்பெயரை எடுத்தார் ஜார்ஜ். மேலும் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது சென்னை கமிஷனராக ஜார்ஜ் இருந்தால் தேர்தல் முறைப்படி நடக்காது என திமுகவால் குற்றம் சாட்டப்பட்டது.
இதனால் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் தங்கினார். இதைதொடர்ந்து கடந்த ஆண்டு குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் இவரும் சர்ச்சையில் சிக்கினார்.
டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்ற பின்பும் காவல் ஆணையராகவே நீடித்து வந்தார். இந்நிலையில், இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். ஆனால் பிரிவு உபச்சார விழா வேண்டாம் என தவிர்த்துவிட்டார்.