
சென்னையை சுத்தம் செய்யும் கனமழையும் - 4 நாட்கள் லீவும்...!
சென்னையில் "SEVERE" மழை..!காரணம் தெரியுமா..?
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே ஆங்காங்கு பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளது.
இதற்கு முன்னதாக சென்னையை பொறுத்தவரை மிதமான மழையும் பெய்து வந்தது.இந்நிலையில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்
இந்நிலையில் மழையும் பெய்ய தொடங்கியுள்ளதால்,சென்னையையே தண்ணீர் விட்டு சுத்தம் செய்வது போல் அமைந்துள்ளது. அதாவது பெரும்பாலான மக்கள் சென்னையை விட்டு இந்த நான்கு நாட்கள் அவர்கள் சொந்த இடத்திற்கு பெயர்வதால், சென்னையே காலியாக உள்ளது போன்ற தோற்றம் உருவாக நேரிட்டுள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கத்தில் மழையும் பெருக்கெடுத்து உள்ளது....மக்களும் கூட்டம் கூட்டமாக பயணம் செய்ய காத்திருகிறார்கள்
குறிப்பாக சென்னையில், கோயம்பேடு, பாடி, திருமுல்லைவாயல், கொளத்தூர், அம்பத்தூர்,ரெட்டேரி,போரூர், ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் தற்போது மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது