
சேலத்தில் பெய்து வந்த கனமழையால் சாலையெங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தி ஈடுபட்டு வருகின்றனர்.
சேலத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுக்கெடுத்து ஓடுகிறது. மேலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் மிகவும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
முன்னதாக புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ரோகினி பொதுமக்களை நேரில் சந்தித்து பல்வேறு குறைபாடுகளை கேட்டற்ந்தார். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள தொலைக்காட்சி செய்திகளில் அவர் பெயரே ஒலித்தது.
இந்நிலையில், சாலையெங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தி ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆங்காங்கே அரசு வெட்டிவைத்த குழிகளால் மழைநீரோடு சேர்ந்து கழிவு நீரும் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரோகினி கூறுகையில், விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.