சீனாவில் இருந்து கோவை வந்தவருக்கு கொரோனா; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

By Velmurugan s  |  First Published Dec 29, 2022, 1:09 PM IST

சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமான நிலையம் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை திரிபு கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2% பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை 9 சர்வதேச விமானங்கள் வந்துள்ளன. இதில் 1357 பயணிகள் வந்துள்ள நிலையில், 2% பேர் என்ற அடிப்படையில் 64 பயணிகளுக்கு  சோதனை செய்யப்பட்டுள்ளது.

Latest Videos

ரத்தத்தில் படம் வரைவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் - அமைச்சர் எச்சரிக்கை

இதில் சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்துள்ளார். நேற்று முன் தினம் சிங்கப்பூரில் இருந்து வந்த அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது. 

பொங்கல் சிறப்பு ரயில்; 10 நிமிடத்தில் விற்பனையான டிக்கெட்கள், முன்பதிவு செய்ய மேலும் ஒரு வழி

நேற்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சேலம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர்  கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாக கோவை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவை விமான நிலையத்திற்கு சார்ஜா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து தினமும் இரண்டு விமானங்கள் கோவை வந்து செல்வது குறிப்பிட தக்கது.

click me!