அமைச்சராக பொறுப்பேற்றபோது எழுந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் தனது செயல்பாடுகளால் பதில் அளித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவின் போது ரூ.655 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், திருச்சியில் கட்சி கூட்டம் நடைபெற்றாலே மாநாடு போல் பிரமாண்டமாகத் தான் இருக்கும். அது போல் தான் இப்போதும் தெரிகிறது.
ரத்தத்தில் படம் வரைவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் - அமைச்சர் எச்சரிக்கை
undefined
அமைச்சர்கள் கே.என்.நேருவும், அன்பில் மகேசும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். அதே போல் புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் தான். அவர் அமைச்சரவைக்கு மட்டும் தான் புதிது. ஆனால், இங்கு உள்ள அனைவருக்குமே அவர் பரிச்சியமானவர் தான். அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட போதும், அமைச்சராக பொறுப்பேற்ற போதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
சென்னையில் 3வது நாளாக ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்; 40 பேர் மயக்கம்
உதயநிதி பொறுப்பேற்கும் போது விமர்சனங்கள் எழும் என்று ஏற்கனவே தெரியும். விமர்சனங்கள் அனைத்தையும் தனது செயல்பாடுகளால் அவர் முறியடித்துள்ளார். அவரது செயல்பாடுகளை அனைவருமே பாராட்டி வருகின்றனர். உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை போன்ற அனைத்தும் முக்கியமான துறைகள். இவை அனைத்திலும் உதயநிதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றார்.