திருச்சி மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை... முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடு!!

By Narendran S  |  First Published Dec 28, 2022, 5:10 PM IST

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 


முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை மொண்டிப்பட்டியில் உள்ள காகித ஆலையில் ரூ.1,350 கோடியில் புதிதாக கட்டிய 2 ஆம் அலகு மற்றும் சிப்காட் தொழிற்பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்க முதல்வர் உத்தரவு

Tap to resize

Latest Videos

undefined

மேலும் அவர் நாளை திருச்சி அண்ணா விளையாட்டரங்கம், மணப்பாறை மொண்டிப்பட்டி காகித ஆலையில் நாளை நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக காலை 9.30 மணியளவில், சென்னையில்  இருந்து மு.க.ஸ்டாலின் விமானத்தில் திருச்சி செல்கிறார்.

இதையும் படிங்க: ஆள் பிடிக்கும் வேலையில் இபிஎஸ்.. அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை.. டிடிவி.தினகரன் திட்டவட்டம்..!

இதனை அடுத்து பாதுகாப்பு காரணங்களால் திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

click me!