
தீபாவளி பண்டிகையொட்டி வெளியூர் செல்லும் விரைவு பேருந்துகள் முன்பதிவு இதுவரை 3.5 லட்சம் பேர் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் சுமார் 39 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் 35 ஆயிரம் பேருக்கு நாளை முன்பதிவு செய்யப்பட உள்ளதாகவும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தீபாவளியையொட்டி வெளியூர் செல்பவர்கள் வசதியாக போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதற்காக பல்வேறு இடங்களில் தற்காலிக பேருந்துகள் நிறுத்தம் அமைக்கப்பட்டும், முன்பதிவுக்கான கவுன்டர்கள் கூடுதலாக அமைத்தும் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் வசிப்போர் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக நேற்று (அக்.26) முதல் நாளை மறுநாள் (அக்.28) வரை 3 நாட்கள் சென்னையில் இருந்து 11 ஆயிரத்து 225 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று (புதன் கிழமை) அன்று கோயம்பேடு உள்ளிட்ட தற்காலிக பேருந்து நிலையங்களில்
வெளியூர்களுக்கு செல்ல பயணிகள் குவிந்துள்ளனர். பேருந்துகளின் விவரம் குறித்து விளக்கும் வகையில் போக்குவரத்து கழகம் சார்பில் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளியூர் செல்வதற்காக முன்பதிவு முடிந்துள்ள நிலையில் இதுவரை 3.5 லட்சம்பேர் முன்பதிவு செய்ததாக
போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்யாதவர்கள் பயணம் செய்வதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தல் 7, 8, 9 ஆகிய நடைமேடைகளில் இருந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், நாளை 35 ஆயிரம் பேர் முன்பதிவு செய்வார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேட்டில் முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அசம்பாவித சம்பவங்களை தொடர்ந்து கண்காணிக்க 9 நடைமேடைகளிலும், தாற்காலிக பேருந்து நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், காவல் துறையினரும் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.