தீபாவளிக்கு பேருந்தில் வெளியூர் செல்கிறீர்களா? இலகுவான பயணம் அமைய வேண்டுமா? - அப்ப இதை அவசியம் படியுங்கள்

First Published Oct 28, 2016, 5:22 AM IST
Highlights


தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்கள் பேருந்தில் எளிதாக செல்ல இந்த ஆண்டு தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. அது பற்றி முழு விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. இதில் குடும்பத்துடன் கலந்து கொண்டு பட்டாசு வெடிப்பது, இனிப்பு சாப்பிடுவது என குதூகலமாக இருப்பார்கள். இதனால்,பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் வேலை பார்க்கும் பலர், சொந்த ஊருக்கு செல்லவே விரும்புகின்றனர்.

இதற்கிடையில், சொந்த ஊர் செல்வதற்கான டிக்கெட் எடுக்க காலை 6 மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையம் சென்றால், 7 மணிக்கு அனைத்து டிக்கெட்களும் காலியாகி விடுகின்றன. இதனால், பலர் அரசு பஸ்களை விட்டுவிட்டு, தனியார் ஆம்னி, சொகுசு பஸ்களில், கூடுதல் பணம் செலவானாலும் போகட்டும் என நினைத்து, முன்பதிவு செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், அங்கும் போதிய அளவு டிக்கெட் கிடைக்காமல் போய்விடுகிறது.

இதுஒரு புறம் இருந்தாலும், டிக்கெட் கிடைக்காமல் இருப்பவர்கள், கடைசி நேரத்தில் எந்த பஸ் கிடைத்தாலும், நின்றபடியே சொந்த ஊர் போய் சேரலாம் என ஏராளமானோர் கோயம்பேடு பஸ் நிலையம் வந்து சேர்கின்றனர். அங்கு கட்டுக்கு அடங்காமல் உள்ள கூட்டத்தால், எந்த பஸ், எந்த நடைமேடை, எந்த வழிதடம் என தெரியாமல் தவிக்கும் நிலை உருவாகிறது. இதனால், பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.

இதையொட்டி தீபாவளி பண்டிகையின்போது, பயணிகளின் வசதிக்காக நேற்று முதல் நாளை வரை 3 நாட்கள் சென்னையில் புதிதாக 4 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகையின் போது, பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முதல் நாளை வரை 3 நாட்களுக்கு சென்னையில் புதிதாக 4 இடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு ஏற்ப, தங்கள் பயணத்தை அமைத்து கொள்ளலாம்.

அண்ணாநகர் மேற்கு பஸ் நிலையம்

செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலம் செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பஸ்கள் அண்ணாநகர் (மேற்கு) பகுதியில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் வரை செல்லும் பஸ்கள் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எதிரே 100 அடி சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் அருகில் அமைந்துள்ள பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

தாம்பரம் சானடேரியம்

=================

திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பஸ்களும் (எஸ்.இ.டி.சி., விரைவு பேருந்து) தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் மெப்ஸ்– ல் இருந்து புறப்படும்.

பூந்தமல்லி வழியாக வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

அனைத்து பகுதிகளுக்கு செல்லும் பஸ்களுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் வகையில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் மற்றும் முன்பதிவு செய்யாத பயணிகள் வரும் மாற்றி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களுக்கு சென்று பயணம் செய்யலாம். இதர ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வழக்கம் போல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பஸ்கள் தாம்பரம் பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச்சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பஸ் நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பாக முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் சென்று அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பஸ்களில் பயணம் செய்ய வேண்டும்.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுக்குன்றம் – செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்– செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணம் செய்யலாம்.

அனைத்து பஸ் நிலையங்களுக்கும் இணைப்பு பஸ்கள் மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படுகிறது. 

click me!