சென்னையில் மீண்டும் விபத்து... அரசு பேருந்தும் வேனும் மோதிக்கொண்டதில் தனியார் நிறுவன ஊழியர் துடி துடித்து பலி

By Ajmal Khan  |  First Published Nov 14, 2023, 8:54 AM IST

சென்னையில் இன்று அதிகாலை அரசு பேருந்தும், வேனும் மோதியதில், வேனில் பயணித்த  தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 


சென்னையில் தொடரும் விபத்து

சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர் சாலை விபத்துகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை அண்ணாநகர் 2-வது அவென்யூ பிரதான சாலையில் நேற்று அதிகாலை  அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கிய 6 பேரில் இருவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.  இந்த விபத்தில் மது போதையில் வாகனத்தை வேகமாக ஓட்டியது தெரியவந்தது.

Tap to resize

Latest Videos

பேருந்து வேன் மோதி விபத்து

இந்தநிலையில் இன்று காலை மீனம்பாக்கம் சிக்னலில் அரசு பேருந்தும் தனியார் நிறுவனத்தின் வேனும் மோதி விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் வேன் தலைகீழாக கவிழ்ந்தது.  வேனிலிருந்த தனியார் நிறுவன ஊழியர் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில், நல்வாய்ப்பாக அரசு பேருந்தில் பயணம் செய்த 40 பேரும் எந்தவித காயங்களும் இன்றி உயிர்த்தப்பினர். இந்த விபத்து காரணமாக தாம்பரம்- கிண்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

தக்காளி , வெங்காயம் விலை மீண்டும் கூடியதா.? குறைந்ததா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

click me!