தீபாவளி தோறும் உச்சவரம்பு நிர்ணயித்து மது விற்பனை: திமுக அரசை வறுத்தெடுக்கும் அண்ணாமலை

Published : Nov 13, 2023, 10:28 PM ISTUpdated : Nov 13, 2023, 10:31 PM IST
தீபாவளி தோறும் உச்சவரம்பு நிர்ணயித்து மது விற்பனை: திமுக அரசை வறுத்தெடுக்கும் அண்ணாமலை

சுருக்கம்

டாஸ்மாக்கில் திமுகவினர் வருமானம் ஈட்டுவதற்காக அப்பாவி மக்களின் உயிரை பலிகொடுப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார்.

திமுக அரசு தீபாவளிப் பண்டிகையன்று டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனைக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்து அப்பாவி மக்கள் உயிரை பலி கொடுப்பதாக தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை சொல்கிறார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து இன்று தீபாவளியன்று தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.

கனமழை எச்சரிக்கை எதிரொலி: மயிலாடுதுறை, கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அண்ணாமலை தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

சென்னை அண்ணா நகரில், இன்று காலை, மது போதையில் வாகனத்தை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் , இருவர் பலியாகியிருக்கிறார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். அதே நேரம்,  தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நடந்த மது விற்பனை, சுமார் 467.69 கோடி என டாஸ்மாக் நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. 

மதுவிலக்கு துறையா அல்லது மது விற்பனைத் துறையா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு, மது விற்பனையில் சாதனை படைத்து வருகிறது திமுக அரசு. மதுவால் ஏற்படும் உடல் நலக் குறைவு மரணங்கள், இது போன்ற விபத்துக்களால் பலியாகும் அப்பாவிகளின் மரணங்கள் எதைப் பற்றியும் கவலை இன்றி, உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனை நடத்தி வருகிறது திமுக.

திமுகவினர் நடத்தும் மது ஆலைகளிடம் வாங்கி விற்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் விற்பனை இத்தனை என்றால், அந்த ஆலைகள் நடத்தும் திமுகவினரின் வருமானம் என்னவாக இருக்கும்? தங்கள் கட்சிக்காரர்கள் வருமானத்துக்காக, அப்பாவிப் பொதுமக்கள் உயிரை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது திமுக.

இவ்வாறு அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தேங்க் யூ பொண்டாட்டி! மனைவி ஜோதிகாவுக்கு உருக்கமாக நன்றி சொல்லும் நடிகர் சூர்யா!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

50 மாணவிகள் என்னோட செல்ஃபி எடுத்தாங்க.. விஜய்யுடன் இணைந்ததற்காக வாழ்த்தினார்கள்! செங்கோட்டையன் நெகிழ்ச்சி
மிகவும் ஆபத்தானவர் உதயநிதி.. கொள்கையில் உறுதியுடன் இறங்கி அடிக்கிறார்.. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!