கனமழை எதிரொலி: மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுச்சேரியில் விடுமுறை அறிவிப்பு

By SG BalanFirst Published Nov 13, 2023, 9:11 PM IST
Highlights

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 14ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடிட்டில் அடுத்த 24 மணிநேரத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் நீர் தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. இச்சூழலில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 14ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி தோறும் உச்சவரம்பு நிர்ணயித்து மது விற்பனை: திமுக அரசை வறுத்தெடுக்கும் அண்ணாமலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளித்து கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். இதேபோல, கடலூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளைய தினம் ஒருநாள் விடுமுறை அளிப்பதாக கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கனமழை பெய்துவருகிறது. இதனால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருக்கிறார்.

தெற்கு அந்தமான் பகுதியில் நிலவும் காற்றழுத்தச் சுழற்சி காரணமாக வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

வாட்ஸ்அப்பில் சீக்ரெட் கோடு அம்சம் அறிமுகம்! லாக் செய்த உரையாடல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!

click me!