தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழப்பு... 2,765 பேருக்கு தொற்று!!

Published : Jul 07, 2022, 09:07 PM IST
தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழப்பு...  2,765 பேருக்கு தொற்று!!

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,765 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,765 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: உஷார் !! இந்தியாவில் புது வகை ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிப்பு.. WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,011 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,028 ஆகவே உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,378 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,103 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,37,193 ஆக உள்ளது.

இதையும் படிங்க: மக்களே உஷார்... கைமீறிப் போகும் கொரோனா , தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு..? அமைச்சர் எச்சரிக்கை.

மாவட்ட வாரியாக: அரியலூர் 0, செங்கல்பட்டு 108, சென்னை 1,011, கோயம்புத்தூர் 125, கடலூர் 36, தர்மபுரி 10, திண்டுக்கல் 16, ஈரோடு 42, கள்ளக்குறிச்சி 21, காஞ்சிபுரம் 124, கன்னியாகுமரி 59, கரூர் 13, கிருஷ்ணகிரி 15, மதுரை 37, மயிலாடுதுறை 4, நாகப்பட்டிணம் 6, நாமக்கல் 29, நீலகிரி 8, பெரம்பலூர் 19, புதுகோட்டை 18, ராமநாதபுரம் 7, ராணிப்பேட்டை 32, சேலம் 41, சிவகங்கை 33, தென்காசி 26, தஞ்சாவூர் 24, தேனி 31, திருப்பத்தூர் 7, திருவள்ளூர் 184, திருவண்ணாமலை 24, திருவாரூர் 13, தூத்துக்குடி 49, திருநெல்வேலி 86, திருப்பூர் 23, திருச்சி 93, வேலூர் 15, விழுப்புரம் 43, விருதுநகர் 27 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறிய மாமியார்.. விடாத மருமகன்.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
Women's Reservation Bill: தமிழகத்தில் திமுக சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்கிறது.. மோடி குற்றச்சாட்டு