
புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக வந்திதா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர் வந்திதா பாண்டே. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக ஐபிஎஸ் கேடராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2013 ஆம் ஆண்டில் சிவகாசி ஏ.எஸ்.பியாக தனது பணியை தொடங்கினார். 2014 ஆம் ஆண்டு சிவகங்கை ஏ.எஸ்.பியாகவும், 2015 ஆம் ஆண்டு கரூர் எஸ்.பியாகவும் அவர் நியமிக்கப்பட்டார். சிவகங்கையில் ஏ.எஸ்.பியாக பணியில் இருந்த போது போலீஸ் அதிகாரிகளாலும் அரசியல் பிரமுகர்களாலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்று, பல எதிர்ப்புகளை தாண்டி அதனை நீதிமன்றத்தில் சமர்பித்தார். இதனால் கோபமடைந்த அதிகாரிகள், அவரை வேறு மாவட்டத்திற்கு மாற்ற முயற்சித்தனர். அதன் விளைவாக 2015 ஆம் ஆண்டு கரூர் எஸ்.பியாக அவர் நியமிக்கப்பட்டார். அங்கும் அவர் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: தற்காலிக ஆசிரியர் பணிக்கு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர்? பள்ளிக்கல்வித்துறை தகவல்!!
2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சமயத்தில் அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் நான்கரை கோடி ரூபாயை பறிமுதல் செய்தார். பல விஐபிக்கள் போன் செய்தும் அதற்கெல்லாம் அடிபணியாமல் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டார். அதேபோல், 2016 சட்ட மன்ற தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்னர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பிடிக்கப்பட்டதற்கும் வந்ததிதா பாண்டேவே காரணம். கரூர் எஸ்.பியாக இருந்த வந்திதா பாண்டே மாற்றப்பட்டதற்கு கலைஞர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டிருந்தார். அதோடு, அன்றைய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வந்திதா பாண்டேவை கொலை செய்ய முயற்சி நடந்தது குறித்து மு.க.ஸ்டாலினும் பேசி எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: கருணாநிதி இருந்தவரை நான் தான் No.1..! மறைவுக்குப் பின் கால் தூசி ஆகிவிட்டேன் வி.பி துரைசாமி வேதனை
இப்படி அவருக்கென தனி வரலாறே உள்ளது. அதன்பிறகு 2016 முதல் 2021 ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் டம்மி பதவிகளுக்கு தூக்கியடிக்கப்பட்ட வந்ததிதா பாண்டே அதிமுக ஆட்சி முடியும் வரை ஓரங்கட்டியே வைத்திருந்தனர். 2016 ஆம் ஆண்டில் ராஜபாளையம் போலீஸ் பட்டாளியன், 2017 முதல் 18 வரை ஆவடி பெட்டாலியன், 2019 முதல் 2021 வரை மதுவிலக்கு அமலாக்கத்துறை, கடைசியாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி என அவர் டம்மி பதவிகளிலேயே பந்தாடப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் மகப்பேறு விடுப்பில் சென்ற வந்திதா பாண்டே ஒரே பிரவசத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்த நிலையில் அவர் சில நாட்களுக்கு முன் மீண்டும் பணியில் சேந்த நிலையில், தற்போதைய திமுக அரசு அவரை புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக நியமித்துள்ளது.