
சென்னை கீழ்பாக்கத்தில் சாலையில் மோட்டார் கைக்கிளில் சென்ற ஒருவரிடம் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிக்கும் வகையில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதையடுத்து பொது மக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்த மாற்றினர். இதற்காக டிசம்பர் 30 ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி கெடு அளித்திருந்ததது.
அதே நேரத்தில் டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால் குற்றம் என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் சென்னை திவான் ராமர் சாலையில் பைக்கில் வந்த சதீஸ்குமார், கபில் ஆகியோரிடம் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சதீஸ், கபில் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.