இன்ஜினியரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…  கலந்தாய்வு தேதி எப்போது ?  தமிழக அரசு விளக்கம்…

First Published Jun 22, 2017, 8:54 PM IST
Highlights
engineering admission rank list published


இன்ஜினியரிங் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப்பட்டியலை  உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று வெளியிட்டார்.

இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிப்புக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இதன் முதல் கட்டமாக நேற்று முன்தினம் ரேண்டம் எண் வெளியிடப்பட்டது

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தர வரிசை பட்டியலை வெளியிட்டார்.

தரவரிசை பட்டியலை tnea.ac.in.annauiv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் நீட் தேர்வு முடிவு வெளியாவது குறித்த தகவலுக்கு பின்பே கலந்தாய்வு குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இன்ஜி., கலந்தாய்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் 59 பேர் 200க்கு 200-ம், 811 பேர் 199-ம், 2,097 பேர் 198, 3,766 பேர் 197 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர். பொது தேர்வு முடிவுகளை போன்று முதலிடம் பெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

 

 

click me!