30 ஆண்டு கால இல்லறம் முடிந்து போனது..!!! மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை...

Asianet News Tamil  
Published : Jun 22, 2017, 05:04 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
30 ஆண்டு கால இல்லறம் முடிந்து போனது..!!! மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை...

சுருக்கம்

oldman suicide due to wife death

வில்லிவாக்கம் அருகே தன்னுடன் 30 ஆண்டு காலம் வாழ்ந்த மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வில்லிவாக்கம் அருகே நொளம்பூர் ஐஸ்வர்யம் பேக் சாலையில் வசித்து வந்தவர் மணிவண்ணன். இவருக்கு வயது61.  இவரது மனைவி செல்வகுமாரி (58).

கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணிவண்ணனின் மனைவி செல்வகுமாரி உடல் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து சில நாட்களாக துக்கத்தில் இருந்த மணிவண்ணன் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்றிரவு அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து நொளம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அதிகார திமிர்..! அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது...! திமுக மீது காங்கிரஸ் எம்.பி அட்டாக்..!
10,000 பேருடன் வைத்திலிங்கம் மாஸ் என்ட்ரி.. வியந்துபோன ஸ்டாலின்.. சீட் கன்பார்ம்.. உ.பி.க்கள் அப்செட்!