பொதுமக்கள் திறந்த போரூர் பாலத்தை மீண்டும் திறக்கிறார் முதல்வர்...!!!

 |  First Published Jun 22, 2017, 4:55 PM IST
edappadi inaugurates porur bridge



போரூர் ரவுண்டானாவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை வரும் 25 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார்.

பூந்தமல்லி மவுன்ட் சாலை, குன்றத்தூர் சாலை, ஆற்காடு சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் போரூர் ரவுண்டான பகுதி விளங்குகிறது.

Tap to resize

Latest Videos

இந்த சாலைகளில் ஏராளமான வாகனகள் சென்று வருவதால் நெருக்கடிகள் நிகழ்ந்த பகுதியாக இருந்து வந்தது.

இதையடுத்து ரவுண்டானா பகுதியில் புதிய பாலம் ஒன்றை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த தி.மு.க. ஆட்சியில் 2010-ம் ஆண்டு போரூர் ரவுண்டானா பகுதியில் ரூ.34.72 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.

இதைதொடர்ந்து அந்த மேம்பால பணிகள் பலமுறை கிடப்பில் போடப்பட்டு மீண்டும் தொடங்கியது. தற்போது மேம்பால கட்டிட பணி முடிவடைந்து விட்டநிலையில், மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கபடாமல் இருந்து வந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி கொண்டு செல்லும் நிலை தொடர்ந்து வந்தது. இதனால் திறக்கபடாமல் இருந்த பாலத்தை பொதுமக்களே திறந்து உபயோகபடுத்த ஆரம்பித்தனர்.

இதற்கு போக்குவரத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று வரும்25 ஆம் தேதி போரூர் ரவுண்டானா அருகே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!