ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இன்றுடன் விடுமுறை முடியும் நிலையில் அனைவரும் சென்னை திரும்ப சுமார் 1 லட்சம் பேர் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என தமிழ்நாடு பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இன்றுடன் விடுமுறை முடியும் நிலையில் அனைவரும் சென்னை திரும்ப சுமார் 1 லட்சம் பேர் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அதிக கட்டணம் வசூல் செய்த காரணத்தால் 120 ஆம்னி பேருந்துகளை அரசு பறிமுதல் செய்ததை கண்டித்து இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு திடீர் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. இன்று முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது.. என்ன காரணம் தெரியுமா?
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்து சேவை இயக்கப்படும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் இயங்கும் என ஒரு சங்கமும், இயங்காது என மற்றொரு சங்கமும் அறிவித்துள்ளதால் பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- ஆவடியில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து! பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு! ரயில் சேவை பாதிப்பு!
இதனிடையே ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துறை அமைச்சர் சிவங்கரை இன்று காலை 10.30 மணிக்கு பசுமை வழிச்சாலையில் சந்திக்க உள்ளனர். இன்று இரவு ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்ற அறிவிப்பால் பயணிகள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.