சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலிருந்து செய்களத்தூருக்கு TN 68 N 0544 என்கிற எண் கொண்ட அரசு பேருந்தை ஓட்டுநர் ஜெயராமன் என்பவர் ஓட்டிவந்து கொண்டிருந்தார்.
மதுபோதையில் ஆபாச வார்த்தையில் பேசிய அரசு பேருந்து ஓட்டுநரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலிருந்து செய்களத்தூருக்கு TN 68 N 0544 என்கிற எண் கொண்ட அரசு பேருந்தை ஓட்டுநர் ஜெயராமன் என்பவர் ஓட்டிவந்து கொண்டிருந்தார். அப்போது செய்களத்தூர் விலக்கு பகுதியில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை எடுக்கவில்லை என்றால் ஏத்தி இறக்கி விடுவேன் என பேருந்து ஓட்டுநர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- ஆவடியில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து! பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு! ரயில் சேவை பாதிப்பு!
சாலையில் அவ்வளவு இடம் இருந்தும் ஓரமாக நிற்கிற வாகனத்தை ஏன் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அனைவரையும் மதுபோதையில் ஆபாச வார்த்தைகளால் பேசியதோடு என்னை என்ன செய்ய முடியும் என கேட்டுள்ளார். பேருந்தில் அத்தனை பயணிகள் இருந்தும் நீங்கள் எப்படி தகாத வார்த்தைகளால் பேசலாம் என அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இவர் ஏற்கனவே சில பிரச்சினையால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தற்போதுதான் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- பயணிகள் கவனத்திற்கு.. இன்று ஆம்னி பேருந்துகள் இயங்குமா? இயங்காதா? வெளியான முக்கிய அறிவிப்பு.!