ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து... 11 பேர் படுகாயம்..!

Published : Dec 24, 2018, 05:29 PM IST
ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து... 11 பேர் படுகாயம்..!

சுருக்கம்

சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு இன்று அதிகாலை 25 பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை பெங்களூரை சேர்ந்த டிரைவர் முகமதுதன்வீர் ஓட்டினார்.

சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு இன்று அதிகாலை 25 பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை பெங்களூரை சேர்ந்த டிரைவர் முகமதுதன்வீர் ஓட்டினார்.

வேலூர் அடுத்த மோட்டூர் என்ற பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளின் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. 

இதில் பஸ் டிரைவர் முகமதுதன்வீர், கோவையை சேர்ந்த பிரகாஷ், குமரேசன், பாஸ்கர், ராஜேஷ், சத்தியநாதன், விஷ்ணுஹாசன், ஹரிகா, அன்னபூர்ணா உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இடிபாடுகளில் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரிக்கின்றனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால், சென்னை - பெங்களூர்  தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!