நடுரோட்டில் கேட்பாரற்று கிடந்த 80 கோடி ரூபாய்... வேலூரில் பரபரப்பு!

By vinoth kumar  |  First Published Dec 19, 2018, 11:35 AM IST

ஆம்பூர் அருகே 80 கோடி ரூபாய் பணத்துடன் கண்டெய்னர் லாரி பழுதாகி நடுரோட்டில் திடீரென நின்றது. சில மணிநேரம் கேட்பாரற்று கிடந்த 
அந்த வாகனத்திற்கு பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் அதிகளவில் குவிக்கப்பட்டது. இதையொட்டி அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


ஆம்பூர் அருகே 80 கோடி ரூபாய் பணத்துடன் கண்டெய்னர் லாரி பழுதாகி நடுரோட்டில் திடீரென நின்றது. சில மணிநேரம் கேட்பாரற்று கிடந்த 
அந்த வாகனத்திற்கு பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் அதிகளவில் குவிக்கப்பட்டது. இதையொட்டி அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ரிசர்வ் வங்கி கிளையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு நேற்று இரண்டு கண்டெய்னர் லாரிகள் புறப்பட்டன. இதில் மொத்தம் 80 கோடி பணம் வைக்கப்பட்டு சீலிடப்பட்டு இருந்தது. இந்த லாரிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் முன்னும், பின்னும் 3 கார்களில் 22 போலீசார் பாதுகாப்புக்கு சென்றுக்கொண்டிருந்தன. 

Latest Videos

undefined

அப்போது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தில் இரவு, 7:00 மணிக்கு, முன்னால் சென்ற லாரி இன்ஜின் பழுதானதால் நின்றது. இதனால் பின்னால் வந்த மற்றொரு லாரியும் நிறுத்தப்பட்டது. லாரி பழுதுக்கு என்ன காரணம் என்று முதலில் தெரியாததால் பாதுகாப்புப் பணிக்கு வந்த போலீசார் உடனடியாக அலர்ட் ஆகி கண்டெய்னர்களைச் சுற்றி வளைத்து துப்பாக்கி ஏந்தி நின்றனர்.

பின்னர் டிரைவர்கள் லாரியை சாலையோரம் நிறுத்தி சரிசெய்ய முயன்றனர். முடியாததால் செங்கிலிகுப்பம் அருகே தனியார் நிறுவன சர்வீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று சரிசெய்யப்பட்டு பின்னர் ஒசூருக்கு எடுத்து செல்லப்பட்டது. இதற்கிடையே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு  லாரியை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் நின்றிருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!