விபத்தில் சிக்கிய 2.0 கிராபிக்ஸ் டிசைனர்... போராடி மீட்ட பொதுமக்கள்... குவியும் பாராட்டுகள்!

By vinoth kumarFirst Published Dec 2, 2018, 11:16 AM IST
Highlights

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போலீசாரின் சாதுரியத்தால் விபத்தில் சிக்கிய 3 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த காரில் பயணித்தவர் 2.O படத்திற்கான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

நேற்று இரவு சென்னை ஆவடியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி அவரது குடும்பத்துடன் பெங்களூர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆம்பூர் அடுத்த மின்னூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி கிணற்றில் கவிழ்ந்தது. 

கிணற்றில் விழுந்த சுந்தரமூர்த்தி எப்படியோ சுதாரித்துக்கொண்டு 108-ஐ தொடர்புகொண்டு உதவியை நாடியுள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் இடம் தெரியாமல் திகைத்துள்ளனர். உடனே இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படட்டது. பின்னர் விடியற்காலை அதிவேகமாக வந்த ரோந்து போலீசார் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்த நபர்களை கண்டுபிடித்தனர். 

தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆம்பூர் காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் மற்றும் காவலர் சரவணன் ரோந்து போலீஸ் உதவி ஆய்வாளர் ரகுபதி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் என மின் விளக்கு இல்லாத இடத்தில் இருந்த 3 பேரை கண்டுபிடித்து சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். உடனே அவர்கள் 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இந்த விபத்தில் சிக்கியவர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்திய போது 2.O படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்த சுந்தரமூர்த்தி மற்றும் அவரது மனைவி மாயா அவரது குழந்தை கிரித்திஷ் ஆகியோர் என்பது தெரிவந்துள்ளது.

click me!