
தேனி
தேனியில் 100.4 டிகிரி வெயில் கொளுத்தி வருவதால் நகர் முழுவதும் வெப்பக் காற்று வீசுகிறது.
தேனி நகர் பகுதியில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. மாலை நேரத்தில் மழை பெய்ததாலும் அடுத்த நாள் அடிக்கும் வெயிலால் இது மழை பெய்த பகுதியா? என்ற அளவுக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது.
அதன்படி, நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை 9 மணியளவில் வெயில் கடுமையாக அடித்தது. நண்பகல் நேரத்தில் வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தி எடுத்தது.
இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும் எரிச்சலை அதிகரிக்கும் வகையில் வெயிலின் தாக்கம் இருந்தது. சாலையோர வியாபாரிகளும் வெயிலில் வாடி வதங்கினர்.
அதன்படி, நேற்று தேனி நகரில் 100.4 டிகிரி வெயில் அளவு பதிவானது. வீடுகளில் மின்விசிறி ஓடினாலும் வெப்பக் காற்றே வீசியது. வெயில் தனது உக்கிரத்தை காட்டத் தொடங்கியுள்ளதால் இது நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதே உண்மை.
தேனி பகுதிகளில் சாலையோரங்களில் இளநீர், பனை நுங்கு, கரும்புச்சாறு, பழச்சாறு, கம்பங்கூழ் விற்பனை செய்வதற்காக புதிது புதிதாக கடைகள் உருவாகி உள்ளன. மக்களும் வெயிலின் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இதுபோன்றவற்றை நாடி வருகின்றனர்.