“விடுபட்டவர்களுக்கு மீண்டும் முதியோர் தொகை கிடைக்கும்.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.!”

By Raghupati RFirst Published Oct 2, 2022, 8:23 PM IST
Highlights

திருச்செந்தூர் கோவிலில் அரசு மற்றும் பக்தர்கள் பங்களிப்புடன் ரூ. 300 கோடியில் திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதேபான்று தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘வடகிழக்கு பருவமழை முதல்-அமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திருச்செந்தூர் கோவிலில் அரசு மற்றும் பக்தர்கள் பங்களிப்புடன் ரூ. 300 கோடியில் திருப்பணிகள் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க..ராஜராஜ சோழன் இந்துவா.? அந்த தற்குறி சொல்லட்டும்.! இயக்குனர் வெற்றிமாறனை எச்சரித்த எச்.ராஜா.!

இதேபான்று தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். திருப்பதி கோவிலுக்கு இணையாக திருச்செந்தூர் கோவிலும் சகல வசதிகளுடன் மேம்படுத்தப்படும். வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்குவதையொட்டி, அதனை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முதியோர் உதவித்தொகை வாங்கியவர்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். ஒரே நேரத்தில் சுமார் 4 ஆயிரம் பேர் நீக்கப்பட்டனர்.

இதையும் படிங்க..கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கெஞ்சிய மனைவி - மகள்கள் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

அவர்களில் தகுதியானவர்களைக் கண்டறிந்து மீண்டும் முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் புதிய மனு வாங்காமலே மறு ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது’ என்று கூறினார்.

இதையும் படிங்க..“மருத்துவமனையில் சவுக்கு சங்கர்.. முதல்வருக்கு பறந்த கடிதம் !” அடுத்து என்ன ? பரபரப்பு சம்பவம்

click me!