திருச்சியில் போதை ஊசிக்கு வாலிபர் பலி - 2 பேர் கைது மூவர் ஓட்டம்

By Dinesh TGFirst Published Oct 2, 2022, 7:17 PM IST
Highlights

திருச்சியில் கஞ்சா, மது போதை போதவில்லை என்று போதை மாத்திரை பயன்படுத்திய இளைஞர் உயிரிழந்த நிலையில் காவவல் துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். மேலும் மூவரைத் தேடி வருகின்றனர்.

திருச்சி மேலச் சிந்தாமணி பழைய கரூர் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் ஜாவித் (24) கார் ஓட்டுநர். இவரது நெருங்கிய நண்பர் ஆசிக் பாட்ஷா (21). இவர்களது நண்பர்கள் உப்புப்பாறையை சேர்ந்த அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகிய அனைவரும் தென்னூர் உழவர் சந்தை அருகே சம்பவத்தன்று இரவு ஒன்று கூடினர். வழக்கமான மதுபோதை, கஞ்சா போதை இவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

போதை ஊசி போட்டுக் கொள்வதற்காக, ஒரு மாத்திரை, 300 ரூபாய் என மொத்தம், 1,500 ரூபாயை கொடுத்து 5 போதை மாத்திரைகளை வாங்கி வந்துள்ளனர். டிஸ்டில்டு வாட்டர் (வடிநீர்) கொண்டு மாத்திரையை கலக்கி, அந்த கரைசலை ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளனர். செலுத்திய சில நிமிடத்தில் ஜாவித், சுருண்டு மயங்கி விழுந்துள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போதை நண்பர்கள், அவரை திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆர்.எஸ்.எஸ். உடையில் ஊர்வலமாக சென்ற அமைச்சர்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜாவித் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஜாவித் மரணம் குறித்து தில்லைநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சிக்கரமான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் கொடூரமான உடல் வலிக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரையை தான் (டைட்டால்) இவர்கள் போதைக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த மாத்திரையை டிஸ்டில்டு் தண்ணீரில் கலக்கி அதை ஊசியாக உடலில் செலுத்தி கொண்டால், மனம் அமைதியாகி, உடல் லேசானதை போல தோன்றுமாம். தொடர்ந்து, 3 மணி நேரம் முதல், 5 மணி நேரம் வரை, நீடிக்கும் போதைக்காக, ஜாவித் உள்ளிட்ட ஐந்து பேரும், தென்னூர் அண்ணாநகரை சேர்ந்த ராம்நாத் என்பவரிடம் இருந்து, ஒரு மாத்திரை, 300 ரூபாய் கொடுத்து ஐந்து மாத்திரைகள் வாங்கி இருக்கின்றனர்.

எடப்பாடி ஒரு தொடை நடுங்கி - டிடிவி தினகரன் அதிரடி

அனைவரும் ஊசியை செலுத்திக் கொண்ட போதும், ஜாவித்துக்கு மட்டும் வலி நிவாரணி மாத்திரை ஊசியால் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம்' என்பது தெரிய வந்தது. அதையடுத்து, போதை மாத்திரை சப்ளையர் ராம்நாத், ஜாவித்தின் நண்பர்கள், ஆசிக், அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோர் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவுச் செய்தனர்.

ராம்நாத் (32), ஆசிக் பாட்ஷா (21) ஆகியோரை கைது செய்தனர். ராம்நாத்திடம் இருந்து, 18 போதை மாத்திரைகள், ஒரு போதை மருந்து பாட்டில், ஒரு ஊசி மற்றும், 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போதை ஊசி பயன்படுத்துகின்ற அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோரை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இலவச பயணத்தை அனைத்து பெண்களும் புறக்கணிக்க வேண்டும் - பிரேமலதா கோரிக்கை
 

click me!