எடப்பாடி ஒரு தொடை நடுங்கி - டிடிவி தினகரன் அதிரடி

By Dinesh TGFirst Published Oct 2, 2022, 6:08 PM IST
Highlights

தனது வீட்டிற்கு காவல் துறையினர் வருகின்றனர் என்றாலே எடப்பாடி பழனிசாமி பயந்துவிடுவார். அவர் ஒரு சரியான தொடை நடுங்கி என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டத்தை ஓசிப் பயணம் என்று கூறியிருப்பது அக்கட்சியினரின் குணாதிசயத்தை காட்டுகிறது. இதற்காகத் தான்  பொதுமக்கள் 10 ஆண்டு காலம் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்காமல் இருந்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் சில திருவிளையாடல் காரணமாக தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.

மாணவிகளைப் போன்று மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் - உதயகுமார் கோரிக்கை

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்படலாம். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் 1991ல் தேர்தல் வந்தது போல மீண்டும் தமிழகத்தில் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டாம் என்று நான் கூறியதை சசிகலா ஏற்கவில்லை.

சசிகலா சிறையில் இருந்தபோது அவரை பார்ப்பதற்காக என்னுடன் இணைந்து அமைச்சர்கள் பலரும் வருவார்கள். ஆனால் எடப்பாடியை அழைத்தால் என்மீது வழக்கு இருப்பதால் என்னை கைது செய்துவிடுவார்கள் என்று பயந்து கொண்டு வரமாட்டார். தனது வீட்டிற்கு காவல் துறையினர் வருகின்றார்கள் என்றாலே பழனிசாமிக்கு தொடை நடுங்கிவிடும். அவர் ஒரு சரியான தொடை நடுங்கி. 

இலவச பயணத்தை அனைத்து பெண்களும் புறக்கணிக்க வேண்டும் - பிரேமலதா கோரிக்கை

ஒரு சிலரின் சுயநலம் , ஆணவம், அகங்காரத்தால்  சொந்த கட்சிக் காரர்களையே விலைக்கு வாங்கும் அளவில் இயக்கம் தவறான பாதையில் போய்க்கொண்டிருப்பதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றமே தீர்ப்பளிக்கும் இல்லை என்றால் வரும் தேர்தலில் மக்கள் மன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் என்றார். ஓ.பி.எஸ் சட்டரீதியாக போராடி வருகிறார். ஓ.பி.எஸ் கருத்தும் எனது கருத்தும் ஒன்று தான் என்று தெரிவித்துள்ளார்.

 

click me!