அக். 2ம்… அடிச்சு தூக்க போகும் கனமழையும்… உஷாராக இருங்க.. எச்சரிக்கும் வானிலை மையம்

By manimegalai aFirst Published Sep 29, 2021, 8:50 AM IST
Highlights

வரும் 2ம் தேதி தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை: வரும் 2ம் தேதி தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் மழை பதிவாகி வருகிறது. விழுப்புரம், வேலூர், கோவை, நீலகிரி என மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மட்டும் அல்லாது, தென் மாவட்டங்களிலும் மழை கொட்டி வருகிறது.

இந் நிலையில் வரும் 2ம் தேதி தமிழகத்தில் சூறை காற்றுடன் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் செய்திருக்கிறது. இது குறித்து வானிலை மையம் தெரிவித்து உள்ளதாவது:

இன்று கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

நாளை முதல் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டஙகளில் கனமழையும், மிதமான மழையும் பெய்யும்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்று வானிலை மையம் கூறி உள்ளது.

 

click me!