செப். 5ம் தேதிக்கு பிறகு…. பெட்ரோல் விலையில் மாற்றம்… ஒரு லிட்டர் இப்போது என்ன ரேட் தெரியுமா..?

By manimegalai aFirst Published Sep 29, 2021, 8:32 AM IST
Highlights

3 வாரங்கள் கழித்து தமிழகத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 99 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது.

சென்னை:  3 வாரங்கள் கழித்து தமிழகத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 99 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை பாடாய்படுத்தி வருகிறது. தினசரி விலை நிலவரம் நிர்ணயிக்கப்பட்டு வந்தாலும், தமிழகத்தில் பெட்ரோல் விலை ஆக.14 முதல் ஒரு லிட்டர் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலைகளில் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்ந்தன. செப்டம்பர் 5ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலானது 99 ரூபாய்க்கு கீழே இருந்தது.

இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலைகள் தற்போதைய நிலவரப்படி மீண்டும் உயர தொடங்கி உள்ளது. 3 நாட்களாக டீசல் விலை அதிகரித்து உள்ளது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.15 ஆகவும், டீசல் விலை ரூ.94.17 ஆகவும் உள்ளது. இன்று பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்றாலும் 3 வாரங்களுக்கு பிறகு 99 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது.

click me!