தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை ? முழு விபரம் இதோ !

By Raghupati RFirst Published Oct 31, 2022, 10:17 PM IST
Highlights

கனமழை காரணமாக நாளை (நவம்பர் 1) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருகிற 4-ம் தேதிவரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது’ என்று தெரிவித்திருந்தது.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 1) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை கனமழை பெய்யும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதால், விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..அதிகரிக்கும் கொரோனா.. லாக்டவுனுக்கு பயந்து ஓடும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வைரல் வீடியோ!

இதையும் படிங்க..ட்விட்டரில் எலான் மஸ்கிற்கு உதவி செய்யும் சென்னை இளைஞர்.. யார் இந்த ஸ்ரீராம்.?

click me!