சென்னை வருகிறார் மம்தா பானர்ஜி… நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு!!

Published : Oct 31, 2022, 09:33 PM IST
சென்னை வருகிறார் மம்தா பானர்ஜி… நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு!!

சுருக்கம்

அக்.2 ஆம் தேதி சென்னை வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அக்.2 ஆம் தேதி சென்னை வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க ஆளுநராகவும் உள்ள இல.கணேசனின் மூத்த சகோதரருக்கு 80 ஆவது பிறந்த நாள் விழா சென்னையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அதில் பங்கேற்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இல.கணேசன அழைப்பு விடுத்திருந்தார்.

இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய விவகாரம்... அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு!!

அதன்பேரில் நாளை மறுநாள் சென்னைக்கு வருகை தரும் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, அவரது முகாம் அலுவலகத்தில் புதன்கிழமை (நவம்பர் 2) அன்று மாலை, தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேச உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம்... தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

ஏற்கனவே மம்தா பானர்ஜி தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரை சந்தித்து பாஜகவுக்கு எதிராக, தேசிய அளவில் வலுவான மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான மம்தா பானர்ஜியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சென்னைதான் எப்பவும் டாப்! போகிக்கும் பொங்கலுக்கும் சேர்த்து ரூ. 518 கோடி மது விற்பனை!
அனல் பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. குலுக்கல் முறையில் காரைத் தூக்கிய அஜித்! டிராக்டர் வென்ற குலமங்கலம் காளை!