பராமரிப்பு பணிக்காக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படவுள்ளது. அந்தவகையில், எண்ணூர், கத்திவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மின்சாரம் தடை
மின்சாரம் பராமரிப்பு பணிக்காக, ஒவ்வொரு பகுதிகளிலும் மின்பாதை சரிசெய்தல், டிரான்ஸ்பார்ம்கள் மாற்றுதல், மின்கம்பம் அமைத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக மின்சாரம் தடை செய்யப்பட்டு பணிகள் நடைபெறும். அந்த வகையில், சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ள இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பில்,
எந்த, எந்த பகுதியில் மின் தடை
பராமரிப்புப் பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் திங்கள்கிழமை (27.11.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் .
எண்ணூர்:
கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணாநகர், சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், விஓசி நகர், விஓசி, எண்ணூர்குப்பம் நகர், உலகநாதபுரம், முகத்துவார குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை மின் தடை செய்யப்படவுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்