கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ளமலையின் உச்சியில் இன்று (நவ. 26) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.
இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மகாதீபம் காண வந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையால் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது. பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல்தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 14-ம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து, பிடாரி அம்மன் மற்றும் விநாயகர் உற்சவங்கள் நடைபெற்றது. மூலவர் சந்நிதியில் உள்ள தங்கக்கொடி மரத்தில் கடந்த 17-ம் தேதி அதிகாலை கொடியேற்றப்பட்டது. இதையடுத்து, பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. 7-ம் நாள் உற்சவமான வெள்ளிக்கிழமை ‘மகா தேரோட்டம்’ நடைபெற்றது.
undefined
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று மாலை ஏற்றப்பட்டது. மகா தீபத்தைக் காண தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக, திருவண்ணாமலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பட்டுள்ளன.
பக்தர்களின் ‘அரோகரா’ என்ற முழக்கத்துடன் விண்ணை ஒளிர செய்யும் விதமாக மகா தீபம் ஏற்பட்டது. திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ளமலையின் உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா