திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலம் கையப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதை எதிர்த்து அமைதியான முறையில் போராடிய விவசாயிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த திமுக அரசு, விவசாயப் பெருமக்கள், பொதுமக்கள் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சி ஆகியோரின் தொடர் எதிர்ப்பை அடுத்து, குண்டர் சட்டத்தை விலக்கிக் கொண்டது வரவேற்கத்தக்கது.
ஆனால் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 6 பேரை மட்டும் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எதற்காக குண்டர் சட்டம் போடப்பட்டது என்பதற்கான காரணங்கள் வியப்பூட்டும் வகையில் உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 43ஐ ஒருமுறை படித்துவிட்டு அதன்படி நடந்துக் கொள்ள வேண்டுமே தவிர விவசாயிகளை குறை சொல்லக் கூடாது.
திருச்சியில் இறப்புச் சான்றிதழ் வாங்க வந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு; உறவினர்கள் சோகம்
நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிக்கும்போது, நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எட்டுவதை விட்டுவிட்டு, குண்டர் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது முற்றிலும் தவறான போக்கு என்பதை, திமுக அரசு உணர்ந்திருக்கும் என்று நம்புகிறோம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தமிழகம் முழுவதும், ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களைப் பயன்படுத்தாமல், பல ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பிக் கொடுத்து வரும் திமுக அரசு, மீண்டும் இது போன்ற தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.