கார்த்திகை திருநாள்; அண்ணாமலையார் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து - அமைச்சர் தகவல்

By Velmurugan s  |  First Published Nov 16, 2023, 2:14 PM IST

திருக்கார்த்திகை  தீபத்திருவிழவை முன்னிட்டு இந்து  சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் அண்ணாமலையார் கோவில் வளாகம் மற்றும் கோவிலுக்குள் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில் வளாகம் மற்றும் கோவிலுக்குள் ஆய்வு மேற்கொண்டார்.

Latest Videos

இந்த ஆய்வின் போது திருக்கார்த்திகை தீபத் திருவிழாவன்று பக்தர்கள் கோவிலுக்குள் வரும் வழி, வெளியே செல்லும் வழி, குடிநீர் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தீபத் திருவிழாவின் போது கூட்ட நெரிசல் ஏற்படாத வகையிலும், விரைவில் சாமி தரிசனம் மேற்கொள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் கடல் அலை; புதுவையில் கடலில் குளிக்க மக்களுக்கு தடை

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் சேகர்பாபு, திருவிழா காலங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகத்துடன் ஆய்வு செய்வதாகவும், கடந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் வந்தனர். இந்தாண்டு 25 சதவீத பக்தர்கள் கூடுதலாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான போக்குவரத்து வசதிகள், கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகள் என அனைத்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தற்காலிக பேருந்து நிலையங்கள், சிறப்பு இரயில்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கண்காணிக்க உள்ளதாகவும், குறிப்பாக வி.ஐ.பி பாஸ் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், போலி அடையாள அட்டையை தடுக்கும் வகையில் கோயில் நுழைவாயிலில் காவல்துறை மூலம் பரிசோதனை செய்து பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தேதி வெளியீடு..! ரிசல்ட் வெளியிடப்படும் தேதியும் அறிவிப்பு

மேலும் கோயிலுக்குள் வரும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்யவும், உள்ளூர் பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்ய போதிய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், அறுபடைவீடு தொடங்கி திருச்செந்தூர் முருகன் கோவில் வரை அனைத்து கோயில்களிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் எப்போதுமே திமுக அரசு மீது புழுதி வாரி தூற்றுவது போல் கடந்த 2018ம் ஆண்டு உயர்த்திய கட்டணத்தை தற்போது உயர்த்தியது போல் பிரசாரம் செய்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

click me!