இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாகும்.. சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கூடுதல் மழை.. வானிலை மையம்

By Thanalakshmi V  |  First Published Oct 3, 2022, 12:41 PM IST

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கடந்த ஆண்டை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கடந்த ஆண்டை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:அதிர்ச்சி !! ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவன் கிட்னி செயலிழப்பு.. சக மாணவன் கொடுத்ததாக புகார்..

Tap to resize

Latest Videos

ஏற்கனவே தமிழகத்தில் நடப்பு ஆண்டு சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகம் கணித்துள்ளது. 

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கடலூர், காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவள்ளூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 17 மாவட்டங்களில் சராசரியை விட கூடுதல் மழைப்பொழிவு இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க: அண்ணா சாலையில் பைக் சாகசம் செய்த யூடியூப் பிரபலம்.. அதே இடத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வைத்த நீதிமன்றம்

மேலும் அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, திருவாரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!