பள்ளர் ஜாதி எஸ்சி பட்டியலில் வராது …. அடித்துச் சொல்லும் டாக்டர் கிருஷ்ணசாமி…

Published : Nov 16, 2018, 08:21 AM IST
பள்ளர் ஜாதி எஸ்சி  பட்டியலில் வராது …. அடித்துச் சொல்லும் டாக்டர் கிருஷ்ணசாமி…

சுருக்கம்

பள்ளர், குடும்பர், காலாடி உள்ளிட்ட 7 ஜாதிகளையும் இணைத்து தேவேந்திரர் குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

பள்ளர், குடும்பர், சாலாடி போன்ற உள்ளிட்ட ஜாதிகள் தற்போது அட்டவணை சாதிப் பிரிவில் உள்ளது. எஸ்.சி. அதாவது ஷெட்யூல்டு காஸ்ட் என அழைக்கப்படுகிறது. இந்த அட்டவணைப் பிரிவில் இருப்பதால் அரசின் சலுகைகள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் பள்ளர், குடும்பர், காலாடி உள்ளிட்ட 7 ஜாதிகளையும் இணைத்து தேவேந்திரர் குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று பேரணி நடத்தப்பட்டது.

அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் 2000 க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில்  பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பள்ளர், குடும்பர், காலாடி உள்ளிட்ட 7 ஜாதிகளையும் இணைத்து தேவேந்திரர் குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் தேவேந்திரர் சமுதாயத்தை தவறுதலாக எஸ்.சி. பட்டியலில் சேர்த்த இங்கிலாந்து அரசு மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், காமன்வெல்த் மூலம் இந்திய அரசுக்கு பரிந்துரைத்து பட்டியல் வெளியேற்றத்தை  நடைமுறைப்படுத்த துணை புரிய வேண்டுமெனவும் எனவும் இந்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: ரெனால்ட் விற்பனை படுஜோரு.. முதலிடத்தில் எந்த மாடல்? ரேட்டை கேட்டா வாங்கிடுவீங்க!
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!