கஜா புயலுக்கு 2 பேர் பலி…. கடலூரில் சோகம் !!

By Selvanayagam PFirst Published Nov 16, 2018, 7:46 AM IST
Highlights

கஜா புயலால் கடும் சேதமடைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்தும், மின்சாரம் தாக்கியும் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.  தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது.

கஜா புயலின் கடைசி பகுதி நாகை - வேதாரண்யம் இடையே   தற்போது கரையை கடந்து வருகிறது, கஜா புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் 1 மணி நேரம் ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதே நேரத்தில் கஜா தீவிர புயல் தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து, 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும். இதனால், உள்மாவட்டங்களில் புயல் செல்லும் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் நாகை மாவட்டத்தை விட கடலூர் மாவட்டம் கஜா புயலால் கடும் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை மழை  வெளுத்து வாங்கி வருகிறது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ஒரு சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் நேற்று அரவு இருளில் மூழ்கிக் கிடந்தது.

இந்நிலையில் வேப்பூர் அருகே சுவர் இடிந்து விழுந்து அய்யம்மாள் என்ற பெண் உயிரிழந்துள்ளார். இதே போல் குள்ளஞ்சாவடி அருகே ஆன்ந்த் என்பவர் மின்சாரம் தாக்கு உயிரிழந்தார்.

இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!